/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/miss-universe1.jpg)
70 ஆண்டுகளாக நடத்தப்படும் பிரபஞ்ச அழகிப் போட்டிக்கான விதிகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
1952ம் ஆண்டு முதல் நடத்தப்படும் பிரபஞ்ச அழகிப் போட்டிகள் கடந்த 2021ம் ஆண்டு வரை 70 பிரபஞ்ச அழகிகளை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளது. எத்தனை புகழை இப்போட்டி வென்றவர்களுக்கு கொடுக்குமோ, அத்தனை கட்டளைகளும் கட்டுப்பாடுகளும் போட்டியாளர்களுக்கு விதிக்கும். இப்போட்டியில் வென்றவர்களுக்கு ரூபாய் 1.8 கோடி பரிசுத்தொகையாகவும், அந்த ஆண்டு முழுதும் மாத ஊதியமாக சிறு தொகையும் கொடுக்கப்படும். ,மேலும், அந்த ஆண்டு முழுவதும் போட்டியில் வென்றவர்கள் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அமைந்திருக்கும் பிரபஞ்ச அழகி மாளிகையில் ஒரு வருடம் தங்க அனுமதிக்கப்படுவார்.
இத்தனை சிறப்புகள் கொண்ட இந்த போட்டியின் விதிமுறைகள் தற்போது தளர்த்தப்பட்டிருக்கிறது. பிரபஞ்ச அழகி போட்டிகளில் பங்கேற்பவர்கள் கட்டாயம் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. அதோடு அல்லாமல் வெற்றி பெற்றவர்கள் தன் பதவிக்காலம் முடியும் வரை திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்ற விதிமுறையும் இருந்தது. ஆனால் தற்போது திருணம் ஆன பெண்கள் பிரபஞ்ச அழகி போட்டிகளில் பங்குகொள்ளலாம் என விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளது. மேலும் குறைந்த வயது தாய்மார்களும் பங்குகொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மாற்றம் உலக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த 70 ஆண்டுகளில்நடந்த பிரபஞ்ச அழகி போட்டிகளில் மொத்தம் மூன்று முறை மட்டுமே இந்தியா வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)