ADVERTISEMENT

ஊழல் வழக்கில் இருந்து கோத்தபய ராஜபக்சே விடுவிப்பு

11:06 PM Nov 21, 2019 | suthakar@nakkh…


இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து அவர் அதிபர் பதவியை ஏற்றார். இவர் மீது ஏற்கனவே வருமானத்துக்கு அதிகமாக 1 லட்சத்து 85 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.1 கோடியே 30 லட்சம்) சொத்து குவித்ததாக ஊழல் வழக்கு நிலுவையில் இருந்து வந்தது. மேலும் இந்த வழக்கு காரணமாக அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. பாஸ்போர்ட்டும் கோர்ட்டுவசம் இருந்தது.

ADVERTISEMENT



இப்போது கோத்தபய ராஜபக்சே அதிபராகி உள்ள நிலையில், கொழும்பு சிறப்பு ஐகோர்ட்டில் துணை சொலிசிட்டர் ஜெனரல் திலீபா பெரீஸ் ஆஜராகி, அரசியல் சாசனத்தின்படி அதிபர் மீது எந்தவொரு சிவில் அல்லது கிரிமினல் வழக்கு போடவோ, வழக்கை தொடரவோ அனுமதி இல்லை என்பதை தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அதிபர் கோத்தபய ராஜபக்சேயை ஊழல் வழக்கில் இருந்து விடுவித்தும், வெளிநாடு செல்ல பிறப்பிக்கப்பட்ட தடையை விலக்கியும் நீதிபதி உத்தரவிட்டார். அவரது பாஸ்போர்ட்டும் விடுவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT