publive-image

Advertisment

மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன், இன்று திருச்சிக்கு வந்தார். இவரை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வரவேற்றார். முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் முரளிதரன், “நாட்டின் பாதுகாப்பிற்காக சீன உளவு கப்பலை தீவிரமாக மத்திய அரசு தொடர்ந்து உன்னிப்பாககண்காணித்து வருகிறது. கச்சதீவை மீட்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் பற்றி நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகிறது. தகுந்த நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.