Skip to main content

உலகின் நீளமான கால்களைக் கொண்ட ரஷ்ய மாடல் - கின்னஸ் சாதனை!

Published on 12/09/2017 | Edited on 12/09/2017
உலகின் நீளமான கால்களைக் கொண்ட ரஷ்ய மாடல் - கின்னஸ் சாதனை!

ரஷ்யாவைச் சேர்ந்த மாடல் அழகி உலகின் நீளமான கால்களைக் கொண்டிருப்பதால் கின்னஸ் சாதனைப்புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.



எகடரினா லிசினா எனும் 29 வயது மாடல் அழகி. இவர் ரஷ்யாவைச் சேர்ந்தவர். 132 செமீ நீளமுள்ள இவரது கால்களுக்காக மட்டுமல்ல, தொழில்முறை மாடல்களில் 6 அடி 8.77 அங்குலம் உயரம் கொண்ட மாடலுக்கான சாதனைக்காகவும் இவர் பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

இதுகுறித்து மனம்திறக்கும் லிசினா, ‘சிறுவயதில் எனது உயரத்தால் பள்ளிகளில் கிண்டல்களுக்கு ஆளாகியிருக்கிறேன். ஆனால், இந்த விஷயத்தில் மற்ற பெண்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என எண்ணினேன். துணிச்சலாக பல விஷயங்களில் என்னை முன்னிறுத்திக்கொண்டேன். ஆனாலும், எனக்கு சரியாக பொருந்துகிற ஆடைகள் மற்றும் செருப்புகளைத் தேர்ந்தெடுப்பதில் சிரமமாக இருந்ததுண்டு’ என தெரிவித்துள்ளார்.

இவரது உயரத்தின் மூலமாக கூடைப்பந்து போட்டிகளில் கலந்துகொண்டு தேசிய அணிக்காக விளையாடியுள்ளார். மேலும், ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கமும் வென்றுள்ளார்.

இருந்தாலும் ஒரு மாடலாக இருக்கவே தான் விரும்பியதாகவும், முழுமையாக அதில் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்