robbery by Google Pay; 5 people arrested

Advertisment

காஞ்சிபுரத்தில் சாலையில் செல்வோரிடம் கத்தியைக் காட்டி கூகுள் பே ஆப் மூலம் பணத்தை வழிப்பறி செய்த 5 நபர்கள் போலீசாரல் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டாரங்களில் சாலையில் வருவோர் செல்வோரை மர்ம கும்பல் ஒன்று கத்தியை காட்டி மிரட்டி கூகுள் பே மூலம் வழிப்பறி செய்வதாக அதிகப்படியான புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை கொண்டு வந்தனர். இந்நிலையில் இந்த வழிப்பறி தொடர்பாக சென்னையைச் சேர்ந்த ஐந்து பேரை போலீசார்தற்போது கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் கூகுள் பே ஆப் மூலம் வழிப்பறி செய்து அதன் மூலம் இரண்டு லட்சம் வரை கொள்ளையடித்தது போலீசார் விசாரணையில் தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.