ADVERTISEMENT

"பதவி பறிப்பு நடக்கும் என்று நினைத்தது கூட இல்லை" - ராகுல் காந்தி

06:56 PM Jun 01, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 10 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மாணவர்கள், பல்துறை அறிஞர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் நேற்று சான்பிரான்சிஸ்கோ சென்ற ராகுல் வெளிநாடுவாழ் இந்தியர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது, “பிரதமர் மோடி அருகில் கடவுள் அமர்ந்தால் பிரபஞ்சம் எப்படி உருவானது என்று அவருக்கே கற்றுக்கொடுப்பார். தனக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும் என இந்தியாவில் ஒரு கூட்டம் இருக்கிறது. வேலைவாய்ப்பு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட அத்தியாவசிய பிரச்சனைகளைப் புரிந்து கொள்ள இந்தியாவின் மோடி அரசு மறுக்கிறது. செங்கோல் மனோபாவம் கொண்டவர்களிடம் நாம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்" என பேசி இருந்தார்.

அதனைத் தொடர்ந்து இன்று கலிபோர்னியாவில் உள்ள ஸ்டாண்ட்போர்டு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதையடுத்து அங்கு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது ராகுல் காந்தி பேசுகையில், "2004 ஆம் ஆண்டு அரசியலுக்கு வந்த போது பதவி பறிப்பு போன்ற சம்பவங்கள் நடக்கும் என்று நினைத்தது கூட இல்லை. அவதூறு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட முதல் நபர் நான் தான். அதன் மூலம் எனது எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டது" என பேசினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT