ADVERTISEMENT

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

07:19 AM Mar 17, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஜப்பானின் ஃபுகுஷிமா கடற்கரை அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக ஜப்பான் வானியல் முகமை தெரிவித்துள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகி உள்ள இந்தத் திடீர் நிலநடுக்கத்தால் 90 பேர் இதுவரை காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தால் டோக்கியோவில் உள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்துக் கொண்டு வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் தற்போது வரை முழுமையாக வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கம் காரணமாக .சுமார் 20 லட்சம் வீடுகள் மின்சார சேவை இல்லாமல் இருளில் மூழ்கி உள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக பல நகரங்களில் ரயில் சேவையானது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதுவரை பொதுமக்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது ஜப்பான் அரசு.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT