ஆஸ்திரேலியா நாட்டின் புரூம் நகரின் மேற்கே சுமார் 210 கிலோ மீட்டர் தொலைவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகி உள்ளது என ஐரோப்பிய மத்திய தரைப்பகுதி நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

Advertisment

indonesia and australia earth quake strikes

ஆஸ்திரேலியாவை தொடர்ந்து இந்தோனேஷியாவின் மலுகு தீவுப் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல். இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி 9.10 மணியளவில் உணரப்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து தற்போது வரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.