ADVERTISEMENT

வாடிக்கையாளர்கள் கார்களைத் திரும்பப்பெறும் நிஸ்ஸான்...!

11:08 AM Dec 08, 2018 | tarivazhagan

நிஸ்ஸான் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடம் இருந்து 1,50,000 கார்களைத் திரும்ப பெறப்போவதாக அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஜப்பான் கார் தயாரிப்பு நிறுவனமான நிஸ்ஸான், தனது ஜப்பான் வாடிக்கையாளர்களிடம் இருக்கும் 1,50,000 கார்களைத் திரும்ப பெறப்போவதாக அறிவித்துள்ளது. இந்தக் கார்கள் முறையான சோதனைகளுக்கு உட்படுத்தப்படாமல் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக நிஸ்ஸான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் இந்நிறுவனத்தின் தலைவர் கார்லோஸ் கோசன் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT