சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் இருந்து பரவ ஆரம்பித்து, தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது கொரோனா வைரஸ். உலகம் முழுவதும் 24 நாடுகளில் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் 44,200- க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சூழலில், 1,110 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அந்நாட்டு மக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.

Advertisment

japan ship coronavirus incident india peoples

இந்நிலையில் ஜப்பான் நாட்டில் யோகோஹாமா என்ற துறைமுகம் அருகே நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் 2 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக, ஜப்பான் நாட்டில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த கப்பலில் 3,700 பேர் பயணித்த நிலையில், 174 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதும், அதில் இருவர் இந்தியர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 தமிழர்கள் உட்பட சுமார் 100 இந்தியர்கள் கப்பலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.