ADVERTISEMENT

ஆன்லைனில் புதுத்துணி அடுத்தநாளே ரிட்டன்- புது ட்ரெண்டில் இறங்கிய இன்ஸ்டாகிராம் போட்டோ பிரியர்கள்!!

01:03 PM Aug 14, 2018 | vasanthbalakrishnan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சமீபமாக இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் உள்ளவர்கள் தங்களை விதவிதமாக போட்டோக்கள் எடுத்து தங்களது பாலோவர்களை ஈர்த்து வருகின்றனர், ஈர்க்க முயற்சித்தும் வருகின்றனர். இந்த இன்ஸ்டாகிராம் போன்றவை சமூக வலைத்தளங்களில் அதிகம் மூழ்கியுள்ளவர்களை போட்டோ வெறியர்களாகவே மாற்றிவிடுகிறது. தினமும் புது ஆடையில், புதிய சூழலில் போட்டோ எடுக்கவேண்டும் அதை பதிவேற்ற வேண்டும் என பல முயற்சிகளில் அவர்களை இறங்க வைத்துவிடுகிறது.

பிரிட்டனில் பார்கேகார்ட் என்ற இடத்தில் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த இன்ஸ்டாகிராம் போட்டோ பிரியர்கள் பற்றி நடத்திய ஆய்வில் பலர் ஆன்லைன் வர்த்தகத்தில் புது துணிகளை ஆர்டர் செய்து வாங்கி அதை அணிந்து போட்டோ எடுத்துவிட்டு மீண்டும் அந்த ஆடை பிடிக்கவில்லை என ரிட்டன் செய்துவிட்டு இப்படி தினம் தினம் புது புது துணிகளை ஆர்டர் செய்து புது போட்டோக்களை இன்ஸ்டாவில் போட்டு புதிய ட்ரெண்டை உருவாக்கி வருகின்றனர்.

அவர்களில் சிலர் ,ஒரு ஆடையில் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டுவிட்டு திரும்பவும் அதே ஆடையில் புகைப்படம் எடுப்பது அசவுகரியத்தை ஏற்படுத்துகிறது என்ற கருத்தை முன்வைத்துள்ளனர். பிரிட்டனில் ஆன்லைனில் உடை வாங்கி அதை உடுத்திப்பார்த்துவிட்டு பிடித்திருந்தால் பணம் கொடுக்கலாம் என்ற முறை உள்ளது. பிடிக்கவில்லை என்றால் ரிட்டன் செய்து விடலாம். அதை சாதகமாக பயன்படுத்தி இடப்படியொரு புது ட்ரெண்டை உருவாக்கிவருகிறது இன்ஸ்டா உலகம். அதில் மேலும் கவனிக்கத்தக்கது இளசுகள் மட்டுமல்ல 32,34 வயது நிரம்பிய ஆண், பெண் என பலரும் இந்த ட்ரெண்டில் இறங்கியுள்ளனர் என்பதுதான்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT