ஒவ்வொரு இயற்கை பேரிடர்கள் நிகழும்போதும் சமூகவலைதளங்களில்போலியான செய்திகள்பரப்பப்படுவது என்பது சாதாரணவிஷயமாக மாறிவிட்டது. இதன் மூலம் சரியான தகவல்கள் வெளிவராமல் இயற்கை பேரிடருடன் சேர்ந்துமக்களும், மீட்ப்பு படையினரும்அவதிக்குள்ளாகிறார்கள்.

Advertisment

aa

Advertisment

இதுபோன்ற விஷயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கரக்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள்மற்றும் மும்பை ஐஐடி நகர்ப்புற அறிவியல் மற்றும் பொறியியல் மையத்துடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு திறனில்வேலை செய்யக்கூடிய வழிமுறையை கண்டுபிடித்துள்ளனர்.

இதன் மூலம் போலி தகவல்களை வெளியிடும் நபரை எளிதாக கண்டறிய முடியும் எனவும், மேலும் செய்தியின் தரத்தை எளிதாக மதிப்பிட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இது இயற்கை பேரிடர் தொடர்பான போலி செய்திகளை கண்டறிய மட்டுமே பயன்படுத்த முடியும் என்று ஆராய்ச்சி குழுவின் தலைவரான சப்தரிஷி கோஷ் தெரிவித்துள்ளார். மேலும்இந்தத் திட்டம் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.