சமூகவலைத்தளங்கள் பொழுதுபோக்குக்கானவை என்பதை தாண்டி தற்போது பணம் சம்பாதிக்கு ஒரு தளமாகவும் மாறி வருகிறது.

Advertisment

pomaranian dog named jiffpom becomes instagram celebrity

இப்படிப்பட்ட சமூகவலைதளங்களின் மூலம் மனிதர்களே பணம் சம்பாதிக்க திணறிவரும் நிலையில் நாய் ஒன்று மாதம் 12 லட்சம் சம்பாதித்து வருகிறது. ஜிஃப்பாம் என்னும் பொமரேனியன் நாய் தனது சேட்டைகளால் சமூகவலைதளங்களில் கோடிக்கணக்கான ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்துள்ள வருகிறது.

Advertisment

இரண்டு கால்களில் நடப்பது, பொம்மைகளுடன் விளையாடுவது என இது செய்யும் குறும்புகள் அனைத்தும் இன்ஸ்டாகிராம் மற்றும் யூ-டியூப் ஆகிய தளங்களில் உலக பிரபலமானவை. ஒட்டுமொத்தமாக சமூக வலைதளங்களில் 30 மில்லியன் ஃபாலோவர்களை கொண்டிருக்கும் இந்த நாய், அதன்மூலம் மாதம்12 லட்சம் சம்பாதிக்கிறது.

இரு கால்களால் வேகமாக நடக்கும் நாய் என்ற கின்னஸ் உலக சாதனையையும் படைத்துள்ள இந்த ஜிஃப்பாம், பல ஹாலிவுட் படங்கள் மற்றும் ஆல்பம் பாடல்களிலும் நடித்துள்ளது. மேலும் மாடலிங், ஃபேஷன் ஷோ என அனைத்திலும் கலந்துகொண்டு கலக்கும் இந்த நாயை பல ஹாலிவுட் பிரபலங்களும் தங்களது சமூகவலைதள பக்கத்தில் பின்தொடர்ந்து வருகின்றனர்.

Advertisment