ADVERTISEMENT

குப்பைகள் மூலம் ஒரு ஒத்துழையாமை இயக்கம்; அச்சுறுத்தும் இராணுவம் - அமைதி வழியில் மக்கள்!

12:03 PM Mar 30, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மியான்மர் நாட்டில் இராணுவப் புரட்சி ஏற்பட்டு, ஆங் சான் சூகி உள்ளிட்டோர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். மேலும், அந்த நாட்டில் ஒரு வருடத்திற்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவ ஆட்சிக்கு எதிராக அந்த நாட்டில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. ஜனநாயக ஆட்சியை வலியுறுத்தியும், கைது செய்யப்பட்ட ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்களை விடுவிக்குமாறும் மியான்மரில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் மீது, மியான்மர் இராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இத்தாக்குதல்களில் பலியாகும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சனிக்கிழமை மட்டும் மியான்மர் இராணுவத்தினர் போராட்டக்கார்கள் மீது நடத்திய தாக்குதலில் 114 பேர் பலியாகினர். இதற்கு அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட 12 நாடுகளின் இராணுவ தளபதிகள் இணைந்து கண்டனம் தெரிவித்தனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மியான்மர் இராணுவத்தின் தாக்குதல் மூர்க்கத்தனமானது என்றும், தனக்கு கிடைத்த அறிக்கையின் அடிப்படையில், ஏராளமான மக்கள் தேவையில்லாமல் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் மியான்மர் இராணுவம் மீது, பொருளாதார தடைகளை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இந்தநிலையில், மியான்மர் இராணுவம், அந்த நாட்டின் மேற்கு எல்லையில் போராளி குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் விமான தாக்குதல் நடத்தியது. இதனால் அப்பகுதியிலிருந்து சுமார் 3000 பேர் தாய்லாந்து நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளதாக மியான்மர் நாட்டைச் சேர்ந்த பெண்கள் அமைப்பு ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

மியான்மர் இராணுவத்தின் கொடூர தாக்குதலுக்கு மத்தியிலும், மியான்மர் மக்களின் போராட்டம் தொடர்ந்து வருகிறது. நேற்றும் (29.03.2021) மியான்மரில் போராட்டக்கார்கள் மீதான தாக்குதல் நீடித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட 510க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்த நாட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் ஒத்துழையாமை இயக்கத்தை கையில் எடுத்துள்ளனர். மியான்மர் மக்கள், முக்கியமான வீதிகளில் குப்பைகளைக் கொட்டி, இராணுவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அச்சுறுத்தும் இராணுவத்திற்கு முன் இந்த அமைதி வழி போராட்டம், தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT