/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/myan-im.jpg)
மியான்மார்நாட்டில்50 ஆண்டுகள் இராணுவஆட்சி நடைபெற்றது. இதற்கெதிராகஆங் சான் சூகிகடுமையாக போராடி வந்தார். அதனையடுத்து எழுந்தமக்கள் போராட்டம் காரணமாகஆங் சான் சூகியின்தேசிய ஜனநாயக கட்சி வெற்றிபெற்றது. இதனையடுத்து டின் கியாவ் என்பவர் பிரதமராகவும், ஆங் சான் சூகிநாட்டின் தலைமை ஆலோசகராகவும் பதவியேற்றனர்.
இதனையடுத்து கடந்த வருடம் நவம்பர்மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் மீண்டும்ஆங் சான் சூகியின் கட்சிவெற்றிபெற்றது. ஆனால் தேர்தல் முடிவுகளை ஏற்கமறுத்தஅந்த நாட்டுஇராணுவம், தேர்தலில்முறைகேடுகள் நடந்தாககூறியது.
இந்நிலையில் இராணுவம், ஆங் சான் சூகியையும்மற்ற அரசியல் தலைவர்களையும் சிறைபிடித்துள்ளது. மேலும் மியான்மார் நாட்டில் ஒருவருடத்திற்கு அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.
மியான்மார் இராணுவத்தின் செயலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து,"சமீபத்திய தேர்தல்களின் முடிவை மாற்ற அல்லது மியான்மரின் ஜனநாயக மாற்றத்திற்குத் தடையாக இருக்கும் எந்தவொரு முயற்சியையும் அமெரிக்கா எதிர்க்கிறது.ஜனநாயகம், சுதந்திரம், அமைதி மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றிற்கான பர்மா மக்களின்லட்சியங்களில் அவர்களுடன் துணை நிற்கிறது. இராணுவம் இந்த நடவடிக்கைகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும்" என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)