ADVERTISEMENT

இளைய தலை முறையை நாசம் பண்ணும் எம்.டி.எம்.ஏ! 

04:35 PM Sep 14, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தின் கருநாகப்பள்ளி இன்ஸ்பெக்டர் போதகுமார், கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவுண்ட்சிலிருந்த போது சாலையின் ஒதுக்குப்புறமான ஒரு கட்டடத்தில் நான்கு இளைஞர்கள் போதைக் கிறக்கத்தில் தங்களின் ஆடைகள் கலைந்தது கூடத் தெரியமால் ஒருவர் மேல் ஒருவர் கிடந்திருக்கின்றனர். அவர்களை அள்ளிக் கொண்டு வந்த இன்ஸ்பெக்டரும், போலீசாரும் அவர்களைச் சோதித்ததில் ஒரு கிராம் அளவு கொண்ட உப்பு போன்ற பாக்கெட் கிடைத்திருக்கிறது.

இளைஞர்களின் போதை இறங்கிய பிறகு இன்ஸ்பெக்டர் அவர்களை விசாரித்திருக்கிறார். கல்லூரி ஒன்றின் மாணவர்களான தங்களுக்கு இந்தப் பொருளை லோக்கல் ஏஜண்ட் ஒருவனிடமிருந்து அரை கிராம் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் என்ற விலையில் வாங்கியதாகச் சொன்னவர்கள், அவன் தெரிவித்தபடி அந்தப் பொருளை மதிய வேளை நாக்கில் தொட்டு வைத்த 15 நிமிடங்களுக்குள்ளாக போதை ஏறிவிட்டது. மூளையே மாறிவிட்டது. எப்படி எவ்வளவு நேரம் கிடந்தோம்னு தெரியாது என்றிருக்கிறார்கள். அவர்கள் மூலமாக அவர்களுக்கு விற்பனை செய்த அந்த நபரையும் வளைத்த இன்ஸ்பெக்டர் அவனிடமிருந்து இரண்டு கிராம் அளவுள்ள போதைக் கரைசலையும் கைப்பற்றியிருக்கிறார்.

பிடிபட்டவைகளை ஆய்வுக்காக அனுப்பிய இன்ஸ்பெக்டருக்கு உடனடித் தகவலாக, அவைகள், மெத்திலீன் டையாக்சி மெத் அம்பீட்டமைன் என்கிற எம்.டி.எம்.ஏ. (MDMA) எனும் போதைப் பொருள். நீண்ட நேரம் போதை தரக் கூடியது. கவனமாகக் கையாள வேண்டிய ரகம் என்று தெரிவிக்கப்பட்டது. அதையடுத்தே உஷாரான இன்ஸ்பெக்டர், விற்பனை செய்தவர்களிடம் விசாரணையை இறுக்க இந்தச் சரக்குகளை ரெகுலராக பெங்களூரிலிருக்கும் வெளிநாட்டவரான நைஜீரியாவைச் சேர்ந்தவரிடமிருந்து வாங்கினோம் என்று வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

போதைச் சரக்கு என்றதும், தொட்ட காரியத்தை இத்தோடு விடாமல் அதன் ஆணிவேரை அறிய கடுமையான ரிஸ்க்கை மேற்கொண்டிருக்கிறார். பார்ட்டியைக் கையில் வைத்துக் கொண்டே பெங்களூர் சென்றவர், அவனைக் கொண்டே அந்த நைஜீரீயா பார்ட்டியிடம் சரக்கு தேவைப்படுவதாகப் பேசவைத்து 5 கிராம் சரக்கு தேவை என்றும் அவனைக் குறிப்பிட்ட இடத்திற்கு சரக்குடன் வரச் சொல்ல, அமௌண்ட் அதிகம் கிடைக்கிறதே என்ற குஷியில் ஏஜண்ட் குறிப்பிட்ட இடத்திற்குச் சரக்குடன் வந்த நைஜீரியா நாட்டுக்காரனை அமுக்கிக் கொண்டு கேரளா திரும்பியிருக்கிறார் இன்ஸ்பெக்டர்.

இன்ஸ்பெக்டரின் விசாரணையில் நைஜீரியாக்காரர் பல விஷயங்களை வெளிப்படுத்தியது கண்டு அதிர்ந்து போயிருக்கிறது போலீஸ் டீம்.

இன்ஸ்பெக்டர் போதகுமார் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிளோ, எம்.டி.எம்.ஏ. என்கிற இந்த போதைப் பொருளைப் பார்த்தால் அத்தனை ஈசியாகச் சரக்கு என்று அடையாளம் கண்டுவிட முடியாது. சாதாரணமாக பவுடர் போன்று நைசாக இருந்தால் யாரும் எளிதில் சந்தேகப்பட்டு விடுவார்கள், ஆனால் இந்தச் சரக்கு ரெண்டுமில்லாம உப்பு போன்று அரைபடாத சர சரவென்று இருப்பதால் இதனைக் கொண்டு வரும்போதோ, கடத்துகிறபோதோ வீட்டு மளிகைச் சமான் போன்று கொண்டு வந்து விடுகிறார்கள். ஐந்து அல்லது பத்துகிராம் கொண்டு வந்தாலும் கூட வெளியே தெரியாது. நைஜீரியாக்காரர்களே இதன் மெயின் சப்ளையர்கள். சுமார் 500க்கும் மேற்பட்ட நைஜீரியாக்காரர்கள் பெங்களூர் உள்ளிட்ட பகுதியிலும் தமிழ் நாட்டிலும் உள்ளனர்.

ஒரு கிராம் எடையுள்ள எம்.டி.எம்.ஏ.வை இவர்கள் 800 விலையில் விற்கிறார்கள். அதைக் கேரளாவிற்குள் கொண்டு வந்து அரை கிராம் ஐந்தாயிரம் விலையில் விற்பதால் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட லாபம் கிடைக்கிறது. இந்த நைஜீரியர்களின் டார்கெட்டே ஐடி, இன்ஜினியரிங், மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட மாணவ மாணவிகளே. இதை தொட்டு நாக்கில் தடவினால் 20 நிமிடங்களில் போதை ஏறிவிடும் அந்த போதை ஆறு மணி நேரம் வரை நீடிக்கும். ஒரு முறை ஒருவர் இதைப் பயன்படுத்தினால் அந்த சுகத்தை விடாமல் தொடர்ந்து அதற்கு அடிமையாகிவிடுவார்கள். அது கிடைப்பதற்கு என்ன வேண்டுமானாலும் பண்ணுவாங்க.

அதனால் தான் இந்தப் பழக்கம் ஸ்பீடாக கல்லூரி மாணவ மாணவிகளிடம் தொற்றி விடுகிறது. மாணவனோ அல்லது மாணவியோ இதைப் பயன்படுத்திகிற போது, மறுபடியும் அது வேண்டும் என்று ஏங்கித் தவிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறபோது, வாங்குவதற்கு கையில் பணமில்லாத போது, இந்த விற்பனையாளர்களே ஒரு கிராம் சரக்கைக் கொடுத்து விற்பனை செய்து அதன் லாபத்தில் சரக்கை யூஸ் பண்ணும்படி செய்து அவர்களையே விற்பனையாளராக்கி விடுகிறார்கள். இந்த டெக்னிக் வழியிலும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் வெளியே தெரியாமல் கஸ்டமராகிவிடுவதால் இதன் புழக்கமும் அதிகமாகி விடுகிறது. இந்தச் சரக்கை பயன்படுத்திகிறபோது அவர்களின் மூளை புரட்டிப் போட்டது போன்று மாறிவிடும். எதிரே இருக்கிற அண்ணனோ, மனைவியோ, தாயோ, தந்தையோ, தம்பியோ, யாருண்ணே தெரியாத அளவுக்கு மூளை மழுங்கடிக்கப்பட்டுவிடும். அசாதாரண நிலைக்குக் கொண்டு போய்விடும். அது சமயம் முரட்டுத் தன்மை வரை கொண்டு போய் விடக் கூடிய தன்மை கொண்டது இந்தச் சரக்கு.

போதை சுகத்திற்காகவே இளைஞர்களின் உலகத்தில் பரவி இதன் டிமாண்ட் அதிகரிப்பதால் தான் கேரளாவின் கொல்லம், கோட்டயம், கொச்சி, ஏர்ணாகுளம், போன்று பல மாவட்டங்களிலிருந்தும் பலர் பெங்களூர் சென்று நைஜீரியாக்காரர்களிடம் சரக்கை வாங்கி வந்து லாபம் பார்ப்பது மட்டுமல்ல, வளரும் இளைஞர்களைச் சீரழிக்கிறார்கள். நைஜீரியா ஆப்ரிக்கா போன்ற நாடுகளிலிருந்து கடத்தப்படும் எம்.டி.எம்.ஏ. விமானங்களின் கார்கோ, கூரியர் மூலமாக பார்சல் சரக்குகளின் வழியே நுழைந்து விடுகிறது. மும்பை சென்னை, பெங்களூர் போன்ற பகுதிகளில் இந்தச் சரக்குடன் கெமிக்கல்களையும் சேர்த்து சரக்காக செரியூட்டி விடுகிறார்கள். உள் நாடுகளில் கூரியர், மற்றும் அரசின் ஸ்பீடு போஸ்ட் மூலமாகவும் கடத்தப்படுகிறது. கடந்தவாரம் கொல்லம் நகரின் விஜய் என்ற வாலிபரின் பெயரில் இந்தச் சரக்கு கூரியர் மூலம் வந்ததைக் கைப்பற்றி அவனையும் வளைத்திருக்கிறோம். இந்த ஆபரேஷனில் இன்ஸ்பெக்டர் போத குமார் மட்டும் ஏரியாவில் ஏழரை லட்சம் மதிப்புள்ள 150 கிராம் எம்.டி.எம்.ஏ.வைக் கைப் பற்றியிருக்கிறார். கொச்சியின் போதைப் புலனாய்வுப் பிரிவு ஏ.சி. மூன்று கோடி மதிப்புள்ள நாலரைக் கிலோ அளவிலான சரக்கை ஏஜண்ட்களிமிருந்து பறிமுதல் செய்திருக்கிறார்.

தேசத்தில் நைஜீரியாக்காரிகளால் புதிதாகப் புகுந்திருக்கும் எம்.டி.எம்.ஏ. கேரளா மட்டுமில்லாமல் தமிழகத்தின் கோவை, திருப்பூர், திருச்சி என்று ஊடுருவியிருக்கிறது. கிராம் 800க்கு விற்பனை செய்கிற நைஜீரியாக்காரர்க்களுக்கு லாபம் முக்கியமல்ல. அவர்களின் நோக்கமே வேறு. அவர்களின் குறி, எதிர்கால சந்ததியினரான இளைஞர்கள் இளந்தலைமுறையினர் யாரும் வளர்ந்து விடக்கூடாது என்பதற்காக அவர்களை மையப்படுததி இந்த போதைச் சரக்கிற்கு அடிமையாக்கி அவர்களின் எண்ணங்களை மழுங்கடிக்கிற நாசம் பண்ணுகிற எண்ணம் கொண்டவர்களாகத் தெரிகிறது. இதனால் இளைஞர்களின் எதிர்காலம் மட்டுமல்ல நாட்டின் வளர்ச்சியும் சீர்கெடுமல்லவா. வளரும் நாடுகளின் ஜனத் தொகையில் உலகின் நம்பர் ஒன் இடத்திலிருப்பது சீனா. அடுத்த இடத்தில் இந்தியா.

நைஜீரியாக்காரர்கள் இங்கே நுழைந்தது போல், அடுத்து சீனாவின் இளைஞர்களையும் குறிவைத்திருக்கிறார்களாம். ஒரு வகையில் இந்த போதைச் சீரழிப்பும் டெரரிஸ்ட் அட்டாக் தான், என்பதாக இவர்களிடம் விசாரணையில் தெரிந்தது என்கிறார்கள். இதே போன்று போதை சப்ளையில் கடந்த ஆறுமாதத்திற்கு முன்பு நைஜீரியாவைச் சேர்ந்த சர்வதேசப் போதைக் கடத்தல் டான் ஜோனாதன் தோர்ன் என்பவரை தூத்துக்குடியின் க்யூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா வளைத்திருக்கிறார்.

இது தொடர்பானவைகள் குறித்து மேலும் விசாரித்த போது சைக்கோ தன்மை, மூளை பாதிப்பு, நரம்புத் தளர்ச்சி ஆகியவைகளை மட்டுப்படுத்தி உத்வேகப்படுத்தவும் சைக்கோ தெரபி சிகிச்சையளிக்கும் வைத்திய பயன்பாட்டிற்காக கெமிக்கல் மூலம் 1912ல் தயாரிக்கப்பட்ட தான் மெத்திலீன் டயாக்சி மெத் அம்பிட்டமைன் என்கிற எம்.டி.எம்.ஏ. 1972ல் புழக்கத்திற்கு வந்து, 1980ல் அது பிரபலமானது. உத்வேகம் கொடுப்பதற்காக கிளப் டான்ஸ் பார்ட்டிகள், மியூசிக் பார்ட்டிகளில் போன்றவைகளில் ஊக்கமருந்தாகவும் பயன்பட்டிருக்கிறது. உலகளவில் 2016ன் போது 15 – 64 வயதிலான 24 மில்லியன் பேர்களுக்கு சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. உலக சுகாதார அமைப்பின் அனுமதியுடன் அமெரிக்காவும் கனடாவும் மருத்துவப்பயன் பாட்டிற்கு பயன்படுத்தியிருக்கிறது. பின்னர் அதில் சில கெமிக்கல் சரக்குகளை இணைத்து போதைக்காகப் பயன்படுத்தியதால் பல நாடுகள் அதை தடை செய்துவிட்டன என்கிறார்கள்.

தேசத்தின் நம்பிக்கை வேர்களான எதிர் கால இளந்தலைமுறையினரை நாசம் செய்து கொண்டிருக்கிறது. எம்.டி.எம்.ஏ.

உயிருக்கு உலைவைக்கும் எம்.டி.எம்.ஏ!

- மணிகண்டன்

டாக்டர் சோனியா ஜார்ஜ்

மூளை பாதிக்கப்பட்டு அப் நார்மல் கண்டிசனுக்குப் போய் சைக்கோத்தனமாக அசாதாரண நிலைக்குப் போனவர்களை குணப்படுத்தவும் அவர்களுக்கு சைக்கோதெரபி அளிக்கவும் அளவான முறையில் பயன்படுத்துவதற்காக மாத்திரையாகப் பயன்படுத்தப்பட்டது. பொதுவாக பாதிக்கப்பட்டவர்களை உறக்கத்தில் வைப்பதற்காக தயாரிக்கப்பட்ட இதனை போதையின் பொருட்டு அளவுக்கதிகம் எடுத்துக் கொண்டால் உடலின் பிரஷ்ஷர் ஏறி, அளவுக்கதிகமான உஷ்ணம் பரவி மரணத்தை ஏற்படுத்திவிடும் என்கிறார் திருவனந்தபுரம் நகரின் மருத்துவரான டாக்டர் சோனியா ஜார்ஜ்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT