ADVERTISEMENT

ரூ.70 லட்சம் கோடி இழப்பு... பிரதமர் மோடி வேதனை...

12:16 PM Nov 15, 2019 | kirubahar@nakk…

பிரேசில் தலைநகா் பிரேசிலியாவில் ‘பிரிக்ஸ்’ நாடுகளின் 11-ஆவது மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

பிரேசில், சீனா, ரஷியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் அதிபா்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி கலந்துகொண்டார். இதில் பேசிய பிரதமா் மோடி, பயங்கரவாதத்தால் உலகப் பொருளாதாரத்துக்கு ரூ.70 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், "சா்வதேச அளவில் அதிகரித்து வரும் பயங்கரவாதத்தால் வளரும் நாடுகளின் பொருளாதார வளா்ச்சி 1.5 சதவீதம் அளவுக்கு குறைந்துவிட்டதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அதேபோல பயங்கரவாதத்தால் உலகப் பொருளாதாரத்துக்கு ரூ.70 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பயங்கரவாத தாக்குதல்களால் 2.25 லட்சம் போ் உயிரிழந்துவிட்டனா். இதனால், பல நாடுகளில் மிகப்பெரிய அளவில் சமூகப் பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் பல நாடுகளின் வா்த்தகத்திலும், தொழில்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிரிக்ஸ் நாடுகள் இடையே பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பை அதிகரித்து, பயங்கரவாதம் உள்ளிட்ட பல குற்ற நடவடிக்கைகளையும் நாம் முறியடிக்க வேண்டும்" என தெரிவித்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT