நாளை இந்திய குடியரசுதினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ள பிரேசில் அதிபர் ஜேர் போல்சனரோ இன்று இந்தியாவந்தடைந்தார்.

Advertisment

jair bolsonaro reached India to join india's republic day celebration

ஜேர் போல்சனரோ டெல்லியில் நாளை நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க உள்ளார். இதற்காக இன்று டெல்லி வந்தடைந்த அவரை, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் நேரில் சென்று வரவேற்றனர். அதன்பின் டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.