ADVERTISEMENT

தமிழ் சங்கம் அழைப்பை ஏற்று ஸ்காட்லாந்து சென்ற அமைச்சர் ஐ.பெரியசாமி! 

05:05 PM Sep 08, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

முல்லைப் பெரியார் அணையை கட்டிய கர்னல் பென்னிகுக் சிலை தமிழக அரசு சார்பில் லண்டனில் திறந்து வைக்கப்பட இருக்கிறது.

இந்த விழாவில் பங்கேற்று சிலையை திறக்க தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியை அனுப்பியுள்ளார். கடந்த 6ம்தேதி லண்டன் சென்ற அமைச்சர் பெரியசாமி. லண்டனில் உள்ள தமிழ்ச் சங்க நிர்வாகிகள் சந்தான பீர்ஒலி மற்றும் லண்டன் கோவன்ட்ரி பிஸ்னஸ் கல்லூரியில் படிக்க கூடிய மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சால்வை கொடுத்து வரவேற்றனர். அதைத் தொடர்ந்து லண்டனில் உள்ள கிரோன்பிளாஸ் ஹேட்டலில் அமைச்சர் தங்கியுள்ளார்.

ஸ்காட்லாந்தில் வாழக்கூடிய தமிழர்களின் அழைப்பை ஏற்று லண்டனில் இருந்து நான்கு மணி நேரம் ரயிலில் பயணம் செய்து ஸ்காட்லாந்து தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டார்.

கர்னல் பென்னிகுக் சிலை கேம்பர்லி நகரில் 10ம் தேதி திறக்க இருப்பதால் அதற்கான பணிகளை அங்குள்ள தமிழ்ச் சங்கமும் அதிகாரிகளும் செய்து வருகிறார்கள். அதுபோல் அமைச்சர் ஐ.பெரியசாமியும் விழா ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டும் அங்குள்ள முக்கிய இடங்களைப் பார்வையிட்டும் வருகிறார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT