ADVERTISEMENT

மியான்மாரில் இராணுவ புரட்சி!... காரணம் என்ன?

09:55 AM Feb 01, 2021 | prithivirajana

ADVERTISEMENT

ADVERTISEMENT

மியான்மார் நாட்டில் 50 ஆண்டுகள் இராணுவ ஆட்சி நடைபெற்றது. இதற்கெதிராக ஆங் சான் சூகி கடுமையாக போராடி வந்தார். அதனையடுத்து எழுந்த மக்கள் போராட்டம் காரணமாக ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி வெற்றிபெற்றது. இதனையடுத்து டின் கியாவ் என்பவர் பிரதமராகவும், ஆங் சான் சூகி நாட்டின் தலைமை ஆலோசகராகவும் பதவியேற்றனர்.

இதனையடுத்து கடந்த வருடம் நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் மீண்டும் ஆங் சான் சூகியின் கட்சி வெற்றிபெற்றது. ஆனால் தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்த அந்த நாட்டு இராணுவம், தேர்தலில் முறைகேடுகள் நடந்தாக கூறியது.

இந்நிலையில் இராணுவம், ஆங் சான் சூகியையும் மற்ற அரசியல் தலைவர்களையும் சிறைபிடித்துள்ளது. மேலும் மியான்மார் நாட்டில் ஒருவருடத்திற்கு அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.

மியான்மார் இராணுவத்தின் செயலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, "சமீபத்திய தேர்தல்களின் முடிவை மாற்ற அல்லது மியான்மரின் ஜனநாயக மாற்றத்திற்குத் தடையாக இருக்கும் எந்தவொரு முயற்சியையும் அமெரிக்கா எதிர்க்கிறது. ஜனநாயகம், சுதந்திரம், அமைதி மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றிற்கான பர்மா மக்களின் லட்சியங்களில் அவர்களுடன் துணை நிற்கிறது. இராணுவம் இந்த நடவடிக்கைகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும்" என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT