myanmar

மியான்மர்நாட்டில் இராணுவப் புரட்சி ஏற்பட்டு,ஆங் சான் சூகி உள்ளிட்டோர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். மேலும் அந்த நாட்டில் ஒரு வருடத்திற்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவ ஆட்சிக்குஎதிராக அந்த நாட்டில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. ஜனநாயக ஆட்சியைவலியுறுத்தியும், கைதுசெய்யப்பட்டஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்களை விடுவிக்குமாறும் அங்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

இப்போராட்டத்தில் கலந்துகொள்ள முயன்றஉயர்நிலைகல்விபடிக்கும்பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே மியான்மரில் சமூகவலைதளங்கள் முடக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அங்கு நாடு முழுவதும் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

Advertisment

இதனைத் தொடர்ந்து தற்போது மியான்மர்இராணுவம், போராட்டங்களை ஒடுக்கபுதிய சட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்மூலம் போராட்டம் நடத்துபவர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் போராட்டம் நடத்துபவர்களுக்கு, அந்தச்சட்டத்தின்படி அபராதம் விதிக்கவும் முடியும். மேலும் மக்கள் போராட்டத்தைஒடுக்கும்விதமாக மியான்மர்நாட்டின் சாலைகளில் இராணுவவாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.