ADVERTISEMENT

13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வெடிக்கும் மெராபி எரிமலை! 

03:31 PM Mar 12, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தோனேஷியாவில் மெராபி எரிமலை வெடிக்க துவங்கியுள்ளது. 9721 அடி உயரம் கொண்ட இந்த எரிமலை தொடர்ந்து புகை மற்றும் சாம்பலைக் கக்கிவருகிறது. இதன் காரணமாக அந்த எரிமலை அருகே வசித்துவரும் மக்கள் அங்கிருந்து வெளியேறிவருகின்றனர். மேலும், இந்த எரிமலை தொடர்ந்து புகை மற்றும் சாம்பலைக் கக்கிவருவதால் அந்தவழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகிவருகின்றனர்.

மெராபி எரிமலையிலிருந்து வெளியேறும் கரும்புகை சுமார் 7 கி.மீ. தூரத்திற்கு பரவும் எனவும், தீக்குழம்பும் வெளியேறி, சுமார் 1.5 கி.மீ. தூரத்திற்கு வழிந்தோடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிமலையில் இருந்து வெளிவரும் சாம்பல் அருகிலுள்ள கிராமங்களை மூழ்கடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

இந்தோனேஷியாவின் மெராபி எரிமலை கடந்த 2010ம் ஆண்டு வெடித்தது. அப்போது அந்த நிகழ்வில் 300க்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT