volcano

இந்தோனேசியாவிலுள்ள சுவேசி தீவில் கடந்த 28ஆம் தேதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமியும் தாக்கியது. இந்த இரண்டு பேரிடர்களால் 1400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல லட்சக்கணக்கான மக்கள் தங்களின் வீட்டை இழந்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரணம் இன்றி அவதிப்படுகிறார்கள், அவர்களுக்கான உதவியை செய்ய வேண்டும் என்று ஐநாவும் வேண்டுகோள் விடுத்தது.

இந்நிலையில், சுனாமி தாக்கிய பகுதிகளில் நேற்று சோபுடான் என்ற எரிமலையும் வெடித்து சிதறியால், மக்கள் மேலும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த எரிமலையில் இருந்து வெளியாகும் நெருப்புக்குழம்பும், சாம்பலும் 4000 மீட்டர் வரை துரத்திற்கு பரவியுள்ளது. இதனால் அங்கிருக்கும் மக்களை தொலைவான இடத்திற்கு செல்லும்படி எச்சரித்துள்ளனர்.