ADVERTISEMENT

"உக்ரைன் தலைநகரை விட்டு உடனே வெளியேறுங்கள்" - இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல் 

01:22 PM Mar 01, 2022 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே நடைபெற்றுவரும் போர் காரணமாக உக்ரைனில் அசாதாரண சூழல் நிலவுகிறது. தொடர்ந்து, ஆறாவது நாளாக தாக்குதல் நடத்திவரும் ரஷ்யா, பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றி தலைநகர் கீவ்-வை நோக்கி முன்னேறிவருகிறது. உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் ஆப்ரேஷன் கங்கா மூலம் தாயகம் அழைத்துவரப்படும் நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ்-வில் உள்ள இந்தியர்கள் உடனடியாக அந்த நகரத்தைவிட்டு வெளியேறுமாறு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மாணவர்கள் உட்பட அனைத்து இந்தியர்களும் கீவ்-வில் இருந்து ரயில்கள் அல்லது வாய்ப்புள்ள பிற வழிகளை பயன்படுத்தி உடனடியாக இன்றே வெளியேறுங்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் கீவ்-வை ரஷ்யா நெருங்கிவருவதால் இந்த அறிவிப்பை இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT