ukraine and russia issues cooking oil price raise is possible

உக்ரைன்- ரஷ்யா போர் காரணமாக, சூரிய காந்தி எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டு, விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisment

ஆண்டுதோறும் இந்தியாவில் 35 லட்சம் டன் சூரிய காந்தி எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. சூரிய காந்தி எண்ணெய் ஏற்றுமதியில் ரஷ்யா 20% பங்கு வகிக்கும் நிலையில், உக்ரைன் உலகிலேயே அதிகபட்சமாக 70% பங்கு வகிக்கிறது. இதன் மூலம் உலகில் மொத்த சூரிய காந்தி எண்ணெய் ஏற்றுமதியில் இந்த இரண்டு நாடுகள் மட்டுமே 90% இடம் வகிக்கின்றன.

Advertisment

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரை இந்தியாவின் கச்சா சூரிய காந்தி எண்ணெய் இறக்குமதியில் உக்ரைனிடம் வாங்கியது 65% ஆக இருந்தது. மொத்தம் ரூபாய் 15,000 கோடிக்கு கச்சா சூரியகாந்தி எண்ணெய் உக்ரைனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. பொதுவாக, இறக்குமதி செய்யப்படும் கச்சா சூரிய காந்தி எண்ணெய் மூலம், சுத்திகரிப்பு நிறுவனம் 40 முதல் 45 நாட்களுக்கு விற்பனைக்கு தேவையான இருப்பை வைத்திருக்கும்.

எனவே, உக்ரைன்- ரஷ்யா இடையேயான போரால் அடுத்த சில வாரங்களுக்கு இந்தியாவில் சூரிய காந்தி எண்ணெய் இருப்பில் பிரச்சனை எழ வாய்ப்பில்லை. எனினும், போர் நீடிக்கும் நாட்களில் ரஷ்யா- உக்ரைனில் ஏற்றுமதி பாதிக்கப்படும் சூழலைப் பொறுத்து, இந்தியாவில் கச்சா சூரிய காந்தி எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

Advertisment

அதைத் தொடர்ந்து, சூரிய காந்தி எண்ணெய் விற்பனை விலை உயர வாய்ப்புள்ளது. அதேநேரம், உக்ரைனில் கோதுமை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய கோதுமைக்கு மற்ற நாடுகளின் தேவை அதிகரித்துள்ளதால், கோதுமை ஏற்றுமதி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் இந்தியாவில் உள்ள சூரிய காந்தி எண்ணெயைபயன்படுத்தும்குடும்பத் தலைவிகளுக்கு கடும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.