Ukrainian actress Oksana Shvets killed Russian rocket attack

ரஷ்யா, உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த மாதம் 26ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோல்வியடைந்தது. வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தனக்கு எதிரான தீர்மானத்தை ரஷ்யா தோற்கடித்தது. 22 ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது உக்ரைன் மீதான போர்.

Advertisment

இந்நிலையில் ரஷ்யராணுவம் கீவ் நகரத்தில் உள்ள குடியிருப்பின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் உக்ரைனைச் சேர்ந்த பழம்பெரும் நடிகைஒக்ஸானா ஷ்வெட்ஸ்(67) என்பர் உயிரிழந்துள்ளார். இதனைஉறுதி செய்த கீவ் போஸ்ட் பத்திரிக்கை,"கிவ் குடியிருப்பு பகுதியில் நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் திறமையான திரைக்கலைஞர் உயிரிழந்துள்ளார்'' எனத் தெரிவித்துள்ளது. இவரின்மறைவு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment