ADVERTISEMENT

19ஆம் நூற்றாண்டின் கடைசி நபர் இயற்கை எய்தினார்!

05:47 PM Apr 22, 2018 | Anonymous (not verified)

உலகின் மிகமூத்த நபரும், 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவருமான ஜப்பானைச் சேர்ந்த பாட்டி உயிர்நீத்தார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

உலகின் மிகமூத்த நபர் என்று அறியப்பட்டவர் நபி தஜிமா (117). இவர் தெற்கு ஜப்பானின் கிகாய் நகரில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். நபி தஜிமா 1900ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் நாள் பிறந்தவர். இவருக்கு ஏழு மகன்களும், 2 மகள்களும் பிறந்தனர். மூன்று தலைமுறை கொள்ளுப் பேரப்பிள்ளைகளைப் பார்த்துவிட்ட இவர், 160 வாரிசுகளைப் பெற்றிருக்கிறார்.

உலகின் மூத்த மனிதராக இருந்த ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த வயலெட் பிரவுன் (117) கடந்த செப்டம்பர் மாதம் இயற்கை எய்திய நிலையில், உலகின் மிகமூத்த மனிதர் என்ற இடத்தை நபி தஜிமா பிடித்தார். இது தொடர்பாக ஜப்பானில் நடந்த நிகழ்ச்சியில் இசைக்கப்பட்ட பாடலுக்கு தஜிமா கைகளை உயர்த்தி நடனமாடும் வீடியோ காட்சிகள் வைரலாகின.

கடந்த ஜனவரி மாதம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தஜிமா, சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று அவரது உயிர் பிரிந்தது. இந்தத் தகவலை கிகாய் நகர கவுன்சிலர் சுசுமு யோஷியுகி உறுதிசெய்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT