Skip to main content

புதிதாக ஐந்து மாகாணங்களில் அவசரநிலையை அமல்படுத்திய ஜப்பான்!

Published on 31/07/2021 | Edited on 31/07/2021

 

japan

 

ஜப்பான் நாட்டில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வரும் அதேநேரத்தில், அங்கு கரோனா தொற்றும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்கனவே ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் இடமான ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அவரசர நிலை அமல்படுத்தபட்டுள்ளது. இருப்பினும் அங்கு கரோனா பரவல் அதிகமாகவே உள்ளது.

 

அதேபோல் டோக்கியோவை தவிர மேலும் சில இடங்களிலும் கரோனா அதிகரித்து வந்ததது. இதனையடுத்து ஜப்பான் அரசு, டோக்கியோவில் அமல்படுத்தப்பட்டுள்ள அவசர நிலையை ஆகஸ்ட் இறுதி வரை நீட்டித்துள்ளதோடு, சைடாமா, சிபா, கனகாவா, ஒசாகா மற்றும் ஒகினாவா மாகாணங்களிலும் நாளை முதல் அவசர நிலை அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது.

 

இதைத்தவிர ஹொக்கைடோ, இஷிகாவா, கியோட்டோ, ஹியோகோ மற்றும் ஃபுகுவோகா மாகாணங்களில் ஹொக்கைடோ, இஷிகாவா, கியோட்டோ, ஹியோகோ மற்றும் ஃபுகுவோகா மாகாணங்களில் குறைவான அவசரகால கட்டுப்பாடுகள் நாளை முதல் ஆகஸ்ட் இறுதி வரை அமல்படுத்தப்படும்எனவும் அறிவிக்கப்ட்டுள்ளது.

 

மேலும் ஜப்பான் அரசு, தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளதோடு, இளம் வயதினருக்கு தடுப்பூசி செலுத்துவதில் கவனம் செலுத்தப்படும் எனவும் கூறியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நிலவில் வெற்றிகரமாக கால் பதித்த ஜப்பான் விண்கலம்!

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
Japanese spaceship successfully set foot on the moon

இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராயக் கடந்த ஆண்டு ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3 நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி மாலை நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்தது. இதன் மூலம் உலகில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவிற்கு பிறகு நிலவில் கால் பதித்த நான்காவது நாடாக இந்தியா மாறியிருந்தது.

அதிலும் குறிப்பாக, நிலவின் தென் துருவத்தில் கால் பதிக்கும் உலகின் முதல் நாடாக இந்தியா தன் சாதனையைப் பதிவு செய்தது. இதனையடுத்து நிலவை ஆய்வு செய்ய ஜப்பான் விண்கலமான‘ஸ்சிலிம்’ விண்ணில் செலுத்தப்பட்டது. இந்நிலையில் நிலவில் வெற்றிகரமாக ஜப்பானின் ஸ்லிம் விண்கலம் தரையிறங்கியதாக ஜப்பானின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஜாக்‌ஷா (JAXA) தெரிவித்துள்ளது.

இதன்மூலம் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியாவுக்கு அடுத்தபடியாக நிலவில் கால் பதித்த 5 வது நாடு என்ற பெருமையை ஜப்பான் பெற்றுள்ளது. ஏற்கெனவே 3 முறை இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு மோசமான வானிலை உள்ளிட்ட காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story

திருவண்ணாமலையில் குவிந்த ஜப்பான் பக்தர்கள்

Published on 07/01/2024 | Edited on 07/01/2024

 

திருவண்ணாமலை நகரில் கிரிவலப் பாதையில் பிரம்மாண்டமான பந்தலில் உலக நன்மைக்காக எனச் சொல்லி ஒரு பெரும் யாகம் நடைபெற்றது. இரண்டு நாள் நடைபெற்ற இந்த யாகத்தில் திரைபிரபலங்கள் கலந்து கொண்டனர்.

ஜப்பானில் கோலிவுட் நடிகர் ரஜினிகாந்துக்கு ரசிகர்கள் இருப்பது தமிழ்நாட்டு திரை ரசிகர்களுக்கு தெரியும். ஆனால் ஜப்பானில் சிவ பக்தர்கள் இருப்பதும் அவர்கள் திருவண்ணாமலையில் நடைபெற்ற யாகத்தில் வந்து கலந்து கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது திருவண்ணாமலை மக்களிடத்தில்.

ஜப்பானில் குடும்பத்தோடு வாழும் தொழிலதிபர் தியாக குறிஞ்சி செல்வன், அவரது மனைவி மருத்துவர் விஜயலட்சுமி இருவரும் சிதம்பரம் தீட்சதரர்களை சென்னையைச் சேர்ந்த அகத்தியர் துரைசாமி சுப்புரத்தினம் மூலம் அழைத்து வந்து திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் இந்த மகா யாகத்தை நடத்தினர்.

உலக நன்மைக்காக தொடர்ந்து 15 ஆண்டுகள் தமிழ்நாட்டின் வெவ்வேறு ஊர்களில் இந்த யாகத்தை பிரமாண்டமாக நடத்தி வருகிறார்கள். அதன்படி இந்த ஆண்டு திருவண்ணாமலையில் நடத்தியுள்ளனர். இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகத்தில் ஜப்பான் நாட்டிலிருந்து குருநாதர் மசாகி அவயமா தலைமையில் 100 க்கும் மேற்பட்ட ஜப்பானிய சிவபக்தர்களான அண்ணாமலையார் பக்தர்கள் இதற்காகவே வந்து கலந்து கொண்டதை உள்ளூர் மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்

திரைத்துறையை சேர்ந்த நடிகர்கள் மோகன், சூரி, ஜீவா, ஸ்ரீகாந்த், கணேஷ், ஆர்த்தி கணேஷ், நடிகைகள் ஸ்ரீதிவ்யா, ஸ்ரீ ரம்யா, ஜனனி ஐயர், விஜய் டிவி புகழ் அமுதவாணன் பாடகி தான்யஸ்ரீ, பாடகி அனிதா, பிரபல வீணை இசைக் கலைஞர் ராஜேஷ் வைத்யா உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் இந்த யாகத்தில் கலந்து கொண்டார்கள்.

இரண்டு நாட்கள் யாகத்தில்  கலந்து கொண்டவர்களுக்கு உணவு வழங்கி பிரமாண்டப்படுத்தியிருந்தனர். ஏற்கனவே ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா வை சேர்ந்த சிவபக்தர்கள் திருவண்ணாமலை அண்ணாமலையாரை வணங்கவும், கிரிவலம் வர குவிந்து வரும் நிலையில் ஜப்பானை சேர்ந்தவர்கள் அண்ணாமலையார் பக்தர்களாக திருவண்ணாமலை வந்திருந்ததை அங்கு வந்த பொதுமக்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.