ADVERTISEMENT

பொது இடங்களில் புகை பிடித்தால் 2 லட்சம் அபராதம்... புதிய சட்டத்தை அமல்படுத்தியது ஜப்பான் அரசு...

03:10 PM Jul 02, 2019 | kirubahar@nakk…

பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் அளவு தொகை அபராதமாக விதிக்கப்படும் என ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

பள்ளிக்கூடங்கள், கல்லூரி, மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் இனி யாரும் புகைபிடிக்க கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்படி புகைப்பிடித்தால் அபராதமாக 3 லட்சம் யென் அபராதமாக விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 2 லட்சம் ஆகும்.

அதுபோல பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் ஆகியவை புகைப்பிடித்தலை அனுமதிக்க கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படி இந்த நிர்வாகங்கள் தங்கள் இடங்களில் புகைபிடிக்க அனுமதித்தால், அந்த நிர்வாகத்திற்கு 5 லட்சம் யென் அபராதமாக விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT