
உலகம் முழுவதும் புகழ்பெற்ற ஒலிம்பிக் போட்டிகள், நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். அதன்படி கடந்த ஆண்டு ஜப்பானின் டோக்கியோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கரோனாதொற்று பரவலால்ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன.
இதன்பிறகு ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள், இந்த ஆண்டுஜூலை 23இல் தொடங்கி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், கரோனா பரவி வரும் காலத்தில், தங்கள் நாட்டில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது குறித்து ஜப்பானியர்கள் என்ன நினைக்கிறார்கள் என அந்நாட்டு ஊடகம் கருத்துக்கணிப்புநடத்தியது.
அதில், மொத்தமாக 61 சதவீத ஜப்பானியமக்கள், ஒலிம்பிக் போட்டிகள் இரத்து செய்யப்பட வேண்டும்அல்லது தள்ளிவைக்கப்படவேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர். 36 சதவீதம் பேர் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆதரவு தெரிவித்துள்ள 36 சதவீதம் பேரில், 28 சதவீதம் பேர், பார்வையாளர்கள் இன்றி ஒலிம்பிக் போட்டியை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)