ADVERTISEMENT

பாலியல் சர்ச்சையை மறைக்க பணம் கொடுத்த விவகாரம்; நெருக்கடியில் சிக்கிய டிரம்ப்!!

10:57 AM Aug 23, 2018 | vasanthbalakrishnan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அமெரிக்காவில் அடல்ட் திரைப்படங்களில் நடிக்கும் ஷடார்லி டேனியல்ஸ் என்ற நடிகை 2016-ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலுக்கு முன் டிரம்பின் மீது பாலியல் குற்றம் சுமத்தியிருந்தார். அதிபர் டிரம்ப் தன்னுடன் பாலியல் உறவு கொண்டதாகவும் அதை மறைக்க தனக்கு ஒரு லட்சம் டாலர் கொடுத்ததாகவும் பகிரங்க குற்றம் சாட்டினார். ஆனால் அதிபர் தேர்தலில் டிரம்பின் நற்பெயரை கெடுக்கவே அவர் இவ்வாறு கூறினார் என சர்ச்சைகள் கிளம்பியநிலையில் டிரம்ப் வெற்றி பெற்றார்.

தேர்தல் நிதி தொடர்பான சட்டத்தை மீறி செயல்பட்டதாக ட்ரம்பின் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் மீது புகார் எழுந்து உள்ளது. இது தொடர்பாக நியூயார்க் தெற்கு மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணையில் ஆஜரான கோஹன் அமெரிக்க தேர்தலில் ''போட்டியிடும் வேட்பாளர் எங்களுடன் செக்ஸ் உறவுகொண்டார் இதை வெளியே சொல்வோம் என்று கூறிய இரண்டு நடிகைகளுக்கு 2 லட்சத்து 80 ஆயிரம் டாலரை கொடுத்து வாயை அடைக்க முயற்சி செய்தோம் என கூறி சட்டத்தை மீறி செயல்பட்டதாகவும் டிரம்ப் சொல்லித்தான் இதை செய்தேன்'' என ஒப்புக்கொண்டார். இதில் வேட்பாளர் என்று குறிப்பிட்டது அதிபர் ட்ரம்பைத்தான். இந்த வழக்கில் ட்ரம்பின் வழக்கறிஞருக்கான தண்டனை விவரத்தை வரும் டிசம்பர் 12-ஆம் தேதி நீதிபதி அறிவிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியானதை அடுத்து இந்த விவகாரம் டிரம்ப்க்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT