ADVERTISEMENT

"பிரதமர் தவறிழைத்துவிட்டார்" -நேபாள கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு!

12:35 AM Aug 01, 2020 | prithivirajana

ADVERTISEMENT

ADVERTISEMENT

பேச்சுவார்தைக்கான தேவை இருக்கும்போது அதை விட்டுவிட்டு தொடர்ந்து இந்தியாவை எரிச்சலூட்டும் வகையில் பேசி பிரதமர் ஷர்மா ஒலி தவறிழைத்து விட்டார் என நேபாள கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இந்தியாவுடனான எல்லைப் பிரச்சனையால் இந்தியாவையும், மத்திய அரசையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி. சமீபத்தில் ராமர் இந்தியாவைச் சேர்ந்தவர் அல்ல எனவும், அவர் நேபாளத்தைச் சேர்ந்தவர் எனவும் கே.பி.சர்மா ஒலி தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாராயண் காஜி ஸ்ரேஸ்தா, "பேச்சுவார்தைக்கான தேவை இருக்கும்போது அதை விடுத்து தொடர்ந்து இந்தியாவை எரிச்சலூட்டும் வகையில் பேசி, பிரதமர் ஷர்மா ஒலி தவறு செய்துவிட்டார். அவரின் அறிக்கைகளில் ராஜதந்திரம் இல்லை. இரு நாடுகளுக்கு இடையேயான சர்ச்சைக்குரிய நிலங்களைக் கோரும் போது, 'உண்மையான அயோத்தி நேபாளத்தில் உள்ளதாகவும்', 'தேசியச் சின்னத்தை'ப் பற்றியும் பேசி ஷர்மா ஒலி தவறிழைத்துவிட்டதாக" குற்றம்சாட்டியுள்ளார்.

நேபாள பிரதமரின் ராமர் குறித்த கருத்து, அரசியல் கருத்து அல்ல, அது யார் மனதையும், உணர்வையும் புண்படுத்த கூறப்படவில்லை என அந்நாடு விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT