ADVERTISEMENT

மானுக்கு ஒமைக்ரான் தொற்று - எச்சரிக்கை விடுக்கும் ஆராய்ச்சியாளர்கள்!

10:30 AM Feb 09, 2022 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வகை கரோனா, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் கரோனா பேரலைக்கு வழிவகுத்தது. அதன்பின்னர் படிப்படியாக ஒமிக்ரானின் பாதிப்பு குறைந்தது. இந்தநிலையில் அமெரிக்காவின் நியூயார்க்கில் வெள்ளை நிற வால் கொண்ட மானுக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது.

அமெரிக்காவில் 30 மில்லியன் வெள்ளை வால் கொண்ட மான்கள் இருப்பதால், அந்த மான்கள் புதிய வகை கரோனாவை உருவாக்கலாம் என பென்சில்வேனியா மாகாண பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பென்சில்வேனியா மாகாண பல்கலைக்கழகத்தின் கால்நடை நுண்ணுயிரியலாளர் சுரேஷ் குச்சிப்புடி கூறுகையில், "வைரஸ் விலங்குகளிடம் பரவுவது, அந்த வைரஸ் திரும்ப மனிதர்களை பாதிப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. அதைவிட முக்கியமாக, வைரஸ் பல்வேறு வகைகளாக திரிய அதிக வாய்ப்புகள் ஏற்படுகிறது. வைரஸ் முற்றிலுமாக திரிபடைந்தால், அதனால் தற்போதைய தடுப்பூசியின் பாதுகாப்பிலிருந்து தப்பிக்க முடியும். எனவே தடுப்பூசியை மீண்டும் மாற்ற வேண்டிய நிலை ஏற்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில், விலங்கிடமிருந்து மனிதர்களுக்கு வைரஸ் பரவுவதாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT