
குழந்தைகள் ஒரு மாயவித்தைக்காரர்கள். எந்த ஒரு கடினமான சூழ்நிலையையும் மகிழ்ச்சியாக்கும் மாயத்தையும், எவரையும்வசீகரிக்கும் வித்தையையும்கற்றுக்கொண்டே பிறக்கிறார்கள்.
எவரையும் வசீகரித்துவிடும் வித்தை என்பதைஎவற்றையும் வசீகரிக்கும் வித்தை எனமாற்றுமளவிற்கு சில சம்பவங்கள் இதற்குமுன்பு நடந்துள்ளன. அதுபோல்மீண்டும் ஒரு சம்பவம்தற்போது நடந்துள்ளது.
அமெரிக்காவின்வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள மாசனூட்டன் ரிசார்ட்டிற்கு, சுற்றுலாவிற்காகஒரு குடும்பம்வந்துள்ளது. அந்த குடும்பத்தைச் சேர்ந்தநான்கு வயது குழந்தை டொமினிக், அவர்கள் தங்கியிருந்த ரிசார்ட்டிற்கு வெளியே விளையாடியுள்ளான். விளையாடிவிட்டுதிரும்போதுஒரு புதிய நபரை, தான் தங்கியிருந்த இடத்திற்கு அழைத்து வந்துள்ளான். அந்தச் சிறுவனும், அந்தப் புதிய நபரும்இணைந்து இருக்கும்புகைப்படமே சமூகவலைதளங்களில் தற்போதைய வைரல்.
அந்தச் சிறுவன் அழைத்து வந்தது ஒரு அழகான மானை. அந்த மானும் அந்த சிறுவனும் எப்போதும் ஒன்றாகவே இருந்தவர்கள் போல், அவ்வளவு இயல்பாக இருக்கிறார்கள். அவர்களின் புகைப்படமே இணையவாசிகளின் இன்றைய பேசுபொருள். தனது மகன் அழகான மானை அழைத்து வந்ததை பார்த்துவிட்டு திகைத்த சிறுவனின் தாயாரே அந்தப் புகைப்படத்தை எடுத்து சமூகவலைதளத்தில் பகிர்ந்திருக்கிறார்.
நான்கு வயது சிறுவனும், அவன் அழைத்துவந்த மான்குட்டியையும் பார்த்தவர்கள், இருவருக்குமிடையே இருந்தஅன்னோன்யத்தை வியந்தவண்ணம் உள்ளார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)