delmicron

Advertisment

2019 ஆம் ஆண்டு முதன்முதலில்சீனாவில் பரவ தொடங்கி, பின்னர் உலகமெங்கும் பரவத்தொடங்கியகரோனாபல்வேறு விதமாக மரபணு மாற்றங்களை அடைந்து வருகிறது. இந்த மரபணு மாற்றமடைந்தகரோனாக்களில் டெல்டா வகை வைரஸ், மற்ற வகை கரோனாக்களை விட அதிகமாக பரவி, அதிகம் பாதிப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்தநிலையில் அண்மையில் தென்னப்பிரிக்காவில்ஒமிக்ரான்என்ற அதிகமான மரபணு மாற்றங்களை கொண்டபுதிய வகை கரோனாகண்டறியப்பட்டது. இந்த புதிய வகை கரோனா டெல்டாவை விட அதிவேகமாகபரவி வருகிறது. இந்த ஒமிக்ரான், டெல்டாவை விட அதிக ஆபத்தை ஏற்படுத்தும் எனவும், அதிக ஆபத்தை ஏற்படுத்தாது எனவும்இருவேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன.

இந்தநிலையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரான் பரவல் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தநிலையில்மஹாராஷ்ட்ராவின் கரோனாபணிக்குழு உறுப்பினரான டாக்டர் ஷஷாங்க் ஜோஷி, டெல்டா கரோனா திரிபும், ஒமிக்ரான் கரோனா திரிபும் இணைந்தடெல்மிக்ரான் கரோனாவேஅமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மினி சுனாமி போன்ற கரோனா பாதிப்புக்கு வழி வகுத்துள்ளது என்கிறார்.