ADVERTISEMENT

கொரோனா பீதி - சீனாவில் விரைவில் டீமானிடைசேசன் நடவடிக்கை..?

10:47 PM Feb 18, 2020 | suthakar@nakkh…

சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் இருந்து பரவ ஆரம்பித்து, தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது கரோனா வைரஸ். உலகம் முழுவதும் 24 நாடுகளில் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் 60,000- க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சூழலில், 1765 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அந்நாட்டு மக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர். சில நாடுகளில் அந்த வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் எவ்வித உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெறவில்லை. ஆனால் உலக நாடுகளில் உயிரிழப்புக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.


பெரும்பாலும் கொரோனா வைரஸ் ரூபாய் நோட்டுகளின் மூலம் தான் மக்களுக்கு பரவுகின்றதாக சொல்லப்படும் நிலையில், இதற்காக சீன அரசு தற்போது முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக சொல்லப்படுகின்றது. அதன்படி நாட்டில் உள்ள கரன்சி அனைத்தையும் திரும்ப பெற்று அந்த கரன்சி நோட்டுக்களை கதிர் வீச்சு மூலம் வெப்பப்படுத்தப்பட்டு அதன் பிறகு 14 நாட்கள் லாக்கரில் பூட்டி வைத்து மீண்டும் புழக்கத்தில் விடப்படும் என்று சொல்லப்படுகின்றது. ஏனெனில் கொரோனா வைரஸின் ஆயுட்காலம் 14 நாட்கள் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதற்காக அந்நாட்டு பணம் முழுவதும் திரும்ப பெறப்பட்டு அதற்கு பதிலாக புதிய பணம் புழக்கத்தில் விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT