india china army

Advertisment

இந்திய - சீன எல்லையில்,கல்வான்பள்ளத்தாக்கு பகுதியில்கடந்த வருடம் இரு நாடுகளுக்குமிடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள்வீர மரணமடைந்தனர். சீனா தரப்பில் 45 பேர் உயிரிழந்ததாகக்கூறப்பட்டது. இந்த நிலையில் சீனஇராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள்உட்படஐந்து பேர் பலியானதாக தற்போது சீன இராணுவத்தின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கைசெய்தி வெளியிட்டுள்ளது.

Advertisment

இந்தியா - சீனாஇடையேயான மோதலைத் தொடர்ந்து, இரு நாடுகளும் எல்லையில் படைகளைக் குவித்தன. இதனால் எல்லையில் பதற்றம் நிலவியது. இதனையடுத்து இரு நாடுகளும், பதற்றத்தைத் தணிக்க பேச்சுவார்த்தையில் இறங்கின. இந்தப் பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட முடிவினைத்தொடர்ந்து,பங்கோங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில், இரு நாடுகளும் படைகளை விலக்கும்பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

மேலும் இரு நாடுகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையின்போது,பாங்கோங் ஏரி பகுதியில் முழுமையான படைக்குறைப்பு செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள் மூத்த தளபதிகளின் அடுத்தக் கூட்டத்தைக் கூட்டவும், மீதமுள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்கவும்இரு நாடுகளும் ஒப்புக்கொண்டிருந்தன. அதன்படிநாளை (20.02.2021) 10ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை உண்மை கட்டுப்பாட்டுக் கோட்டின்அந்தப் பக்கம் உள்ள, சீனப் பகுதியில் நடைபெறவுள்ளதாக இந்தியஇராணுவவட்டாரங்கள் தெரிவித்துள்ளன.