இந்திய-சீன எல்லையானலடாக் பகுதியில், இந்திய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சீன ராணுவத்தினர் முகாமிட்டு வருவதால் இரு நாடுகளுக்கும் இடையே சமீப காலமாகப் பதட்டமான சூழல் நிலவிவருகிறது.
லடாக் எல்லையில் இந்திய ராணுவத்தினருக்கும், சீன ராணுவத்தினருக்கும் மோதல் நடந்துள்ளதாகத் தகவல் வெளியானது. இதில் இந்திய ராணுவத்தைசேர்ந்த ஒரு அதிகாரி மற்றும்இரண்டு வீரர்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ள நிலையில்,அதில் ராமநாதபுரத்தைசேர்ந்த பழனி என்ற ராணுவ வீரர் வீரமரணமடைந்தார். இந்நிலையில்ராணுவ வீரர்பழனியின் உடல் சிறப்பு விமானத்தின் மூலம்தற்பொழுது மதுரை விமான நிலையம் வந்தடைந்துள்ளது.