ADVERTISEMENT

அரை நிர்வாணத்துடன் விருது வாங்கியது ஏன்? பிரபல பாடிகியின் போராட்டம்

01:12 PM Nov 18, 2019 | santhoshkumar

இந்த வருடத்திற்கான கிராமி விருது லாஸ்வேகாஸில் நடைபெற்றது. இந்த விருது விழா அமெரிக்காவிலுள்ள இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை கௌரவப்படுத்தும் விதமாக கொடுக்கப்படுவது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்த வருடத்தில் சிறந்த மாற்று இசை ஆல்பத்திற்கான விருது சிலி நாட்டைச் சேர்ந்த பிரபல பாடகி மோன் லாஃபர்தேவுக்கு அறிவிக்கப்பட்டது. விழாவில் அவரது பெயர் அழைக்கப்பட்டதும், சிவப்பு கம்பளத்தின் மீது கருப்பு நிற உடையில் அவர் நடந்து வந்தார்.

லாபர்டே மேலாடை எதுவும் அணியாமல், அரை நிர்வாணமாக விருது பெற சென்றதால் அங்கிருந்த அனைவரும் அவரையே பார்த்துக்கொண்டிருந்தனர். அவர் தனது மார்பு பகுதியில் சிலி மொழியில், ‘அவர்கள் என்னை சித்திரவதை செய்கின்றனர். பலாத்காரம் செய்து கொன்று விடுகின்றனர்’ என்று எழுதி இருந்தார். தென் அமெரிக்க நாடான சிலியில், அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது.

அங்கு நடக்கும் போராட்டத்தை ஒடுக்க சிலி அரசு மிகவும் மோசமாக நடந்துகொள்கிறது. போலீசார் தடியடி, துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 20 பேர் கொல்லப்பட்டனர். ரப்பர் குண்டுகளை கொண்டு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 200க்கும் மேற்பட்டோர் பார்வை இழந்தனர். இதனை கண்டிக்கும் வகையில், மேலாடை இன்றி அரை நிர்வாணமாக விருதை பெற்றதாகவும் இதனை சிலி மக்களுக்கு சமர்ப்பிப்பதாகவும் லாபர்டே விழாவில் கூறியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT