ADVERTISEMENT

அமெரிக்க இராணுவத்தில் இனி பாலியல் துன்புறுத்தல்கள் குற்றம் - ஜோ பைடன் உத்தரவு

11:54 AM Jan 27, 2022 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

அமெரிக்க இராணுவத்தில் உள்ள பெண்களுக்கும் ஆண்களுக்கும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் நீண்ட காலமாகவே நடைபெற்று வரும் நிலையில், தற்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இராணுவத்தில் நடைபெறும் பாலியல் துன்புறுத்தல்களை இராணுவ நீதி சட்டத்தின் கீழ் குற்றமாக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இதன்மூலம் அமெரிக்க இராணுவத்தில் பாலியல் துன்புறுத்தல்கள் இனி குற்றமாகக் கருதப்படும்.

இதற்கு முன்னதாக அமெரிக்க இராணுவத்தில் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில், ஜோ பைடனின் நிர்வாக உத்தரவையடுத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுபவர்கள் சிறை தண்டனைக்கு உள்ளாகலாம் எனக் கருதப்படுகிறது.

2020ஆம் ஆண்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான 20 வயது இராணுவ வீராங்கனை கொல்லப்பட்டதன் விளைவாக தற்போது ஜோ பைடன் இராணுவத்தில் நடைபெறும் பாலியல் துன்புறுத்தல்களைக் குற்றமாக்கும் உத்தரவைப் பிறப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT