அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகத்தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் தனக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்றுஇல்லை என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகள் முழுவதும் கொரோனா அச்சுறுத்தி வந்த நிலையில் ஊரடங்கு, தனிமைப்படுத்துதல், தடுப்பூசி எனப் பல்வேறுநடவடிக்கைகளுக்குப் பிறகு கொரோனாவின் தீவிரம் குறைந்தது. இந்நிலையில் அமெரிக்க அதிபரின் மனைவிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அங்கு பரபரப்பான சூழலை ஏற்படுத்தியுள்ளது.