ADVERTISEMENT

எதற்காக 200 கோடி டாலர்களை தந்தார் அமேசான் நிறுவனர் 'ஜெஃப் பிஸோஸ்'...?

11:10 AM Sep 15, 2018 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அமெரிக்காவைத் தலைமை இடமாகக் கொண்டு இணைய வர்த்தகத்தில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கும் அமேசான் நிறுவனம், சமூக செயற்பாடுகளிலும் அக்கறை செலுத்திவருகிறது. அதன் ஒரு பகுதியாக அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் 'ஜெஃப் பிஸோஸ்' 200 கோடி டாலர்களை சமூக சேவைக்காக தந்துள்ளார். இந்தத் தொகை கட்டணமற்ற ஆரம்பப் பள்ளிகள் தொடங்கவும், வீடு அற்றவர்களுக்கு வீடு மற்றும் அவர்களுக்கான உணவை உறுதிப் படுத்தவும் செலவிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதில் கட்டணமற்ற ஆரம்பப் பள்ளிகளை நடத்த சேவைகுணம் மிகுந்த, ஒரு குழுவை அமைக்கப் போவதாகவும் தெரிவித்தார். மேலும் "ஒரு குழந்தை தனது ஆரம்பக்கால பள்ளிபடிப்பை நிறுத்திவிட்டால் மீண்டும் அதை தொடர்வது மிகவும் கடினமான விஷயம்" என்றும் குறிப்பிட்டார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT