அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் அமேசான் நிறுவனத்தின் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ் கலந்துகொண்டார். அப்போது பெஸோஸிடம் மிருக வதை குறித்து கேள்வி கேட்ட இந்திய பெண் பிரியா ஷானி மேடையிலேயே கைது செய்யப்பட்ட சம்பவம்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

indian woman arrested on stage for questioning jeff bezos about slaughtering

கலிஃபோர்னியா மாகாணத்தில் அமேசான் நிறுவனத்துக்கு கோழிக்கறி மற்றும் டர்கி கறி விற்கும் பண்ணைகள் இயங்கி வருகின்றன. இதில் நடக்கும் மிருக வதைகளை தடுக்க என்ன செய்ய போகிறீர்கள் என அந்த பெண் கேட்டார். அப்போது ஜெப் பெஸோஸ் பதிலளிக்காத நிலையில், அந்த பெண் மேடையில் ஏறி தொடர்ந்து கேள்வி கேட்டுள்ளார். இதனை அடுத்த நிகழ்ச்சியின் விதிமுறைகளை மீறியதாக கூறி அந்த பெண் உடனடியாக கைது செய்யப்பட்டார். இதனால் அந்த நிகழ்ச்சியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.