ADVERTISEMENT

தடுப்பூசி செலுத்திக்கொண்ட 240 பேருக்கு கரோனா தொற்று உறுதி!

01:30 PM Jan 02, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரோனா தொற்றுக்கு தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகும் 240 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.

சமீபத்தில் அமெரிக்காவில் செவிலியர் ஒருவருக்கு, கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகும் கரோனா தொற்று உறுதியானது. இருப்பினும் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு முன்பே அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது. அதுமட்டுமின்றி கரோனா தடுப்பூசி, கரோனாவிலிருந்து பாதுகாப்பை வழங்க 10-14 நாட்கள் வரை எடுத்துக்கொள்ளும் என்றும், கரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்கள் செலுத்தப்பட்டால்தான் முழுமையான பாதுகாப்பு கிடைக்கும் என்றும் தெரிவிக்கபட்டது.

இந்நிலையில், இஸ்ரேல் நாட்டில், கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 240 பேருக்கு கரோனா உறுதியானதாக, அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தியும் 240 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேலில் தற்போது பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி செலுத்தப்பட்டாலும், கரோனா தொற்று ஏற்பட ஐந்து சதவீத வாய்ப்பு இருப்பதாக ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT