அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்தசெவிலியர் மாத்யூ.இவர் கடந்தடிசம்பர் 18ஆம் தேதி, 'பைசர்' நிறுவனத்தின் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
ஆனால், டிசம்பர் 24 ஆம் தேதி அவருக்கு குளிர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து மருத்துவமனைக்குச் சென்ற மாத்யூவுக்குகரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.இது குறித்து சான்டியாகோ தொற்று நோயியல் நிபுணரும், கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான மருத்துவ ஆலோசனைக் குழுவின் உறுப்பினருமான டாக்டர் கிறிஸ்டியன் ராமர்ஸ், இது எதிர்பாராத ஒன்று அல்ல எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், "செவிலியர் மாத்யூ கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் முன்பே, அவருக்கு கரோனாதொற்று ஏற்பட்டிருக்கலாம். அதுமட்டுமில்லாமல் ஆய்வகப் பரிசோதனையில், கரோனாதடுப்பூசி,வேலை செய்ய 10-14 நாட்கள்வரை எடுத்துக்கொள்ளும் எனத் தெரியவந்துள்ளது" எனக் கூறியுள்ளார்.
மேலும்கிறிஸ்டியன் ராமர்ஸ், "கரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் 50 சதவீத பாதுகாப்பையே வழங்கும். இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டால்தான் 95 சதவீத பாதுகாப்பு கிடைக்கும்" எனக் கூறியுள்ளார்.
கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதற்குப் பிறகும் கரோனா ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.