ADVERTISEMENT

பள்ளி மாணவனை திருமணம் செய்த இளம்பெண் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிபதி உத்தரவு

02:29 PM Sep 18, 2018 | rajavel



திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில், தங்களது மகளை ஒருவர் கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டதாகவும், மகளை மீட்டுத் தருமாறும், கெங்கல மகாதேவி பகுதியைச் சேர்ந்த் பெற்றோர் மனு அளித்தனர்.

ADVERTISEMENT

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரான மகிழேந்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். உடனடியாக கடலாடி போலீசார், கெங்கலமகாதேவி கிராமத்திற்கு நேரில் சென்று மனுதாரரின் மகளையும், அந்த வாலிபரையும் அழைத்து வந்தனர்.

ADVERTISEMENT

அந்த இளம்பெண்ணிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். அப்போது மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான ராஜ்மோகன் உடனிருந்தார்.

விசாரணையில், இளம்பெண் மேஜர் என்பதும், அந்த வாலிபர் 17 வயதான பிளஸ்-2 படிக்கும் மைனர் என்பதும் தெரியவந்தது. மேலும் இருவரும் திருமணம் செய்து கொண்டதும் தெரிந்தது. இதனை கேட்டு நீதிபதி அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து பிளஸ்-2 மாணவரான மைனரை சட்டத்திற்கு புறம்பாக திருமணம் என்ற பெயரில் குடும்பம் நடத்தியதால் அந்த இளம்பெண் மீதும், அந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவருடன் பாலியல் குற்றம் புரிந்ததால் மைனர் வாலிபர் மீதும் வழக்குப்பதிவு செய்ய கடலாடி போலீசாருக்கு முதன்மை மாவட்ட நீதிபதி மகிழேந்தி உத்தரவிட்டார்.

மாணவனை திருமணம் செய்த இளம்பெண் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT