akila

தேனி மாவட்டம் கொழுக்கு மலையில் நிகழ்ந்த தீ விபத்தில் சென்னையில் ஐ.டி. ஊழியராக பணியாற்றி வந்த கும்பகோணத்தைச் சேர்ந்த இளம் பெண் அகிலா உயிரிழந்தார். அந்த சம்பவத்தினால் அவரது பெற்றோர் மற்றும், உறவினர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

Advertisment

தேனி மாவட்டம் குரங்கணி மலையை அடுத்த கொழுக்கு மலைப் பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்கு சென்னையில் உள்ள டிசி.எஸ்.-ல் (TATA COSULTING SERVICES) பணியுரிந்த பூஜா, நிஷா, நிவேதா, அகிலா உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்டோர் சென்றிருந்தனர்.

Advertisment

இந்நிலையில், அந்த மலைப் பகுதியில் நிகழ்ந்த காட்டுத் தீயில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர்.

அவர்களில் 24 வயதான அகிலா என்ற இளம் பெண்ணும் இறந்துள்ளார். அவர் கும்பகோணம் பகவத் விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர்.

Advertisment

அகிலாவின் மரணத்தை உறுதிப்படுத்திய தேனி மாவட்ட போலீசார் அகிலாவின் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்ததையடுத்து அவரது வயதான பெற்றோர் கிருஷ்ணமூர்த்தி, சாந்தி மற்றும் அவரது உறவினர்கள் அருகில் வசிப்பவர்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்தசூழலில் அகிலாவின் உடலை பெற்றுக் கொள்ள உறவினர்கள் தேனி சென்றுள்ளனர். "தீ விபத்தில் உயிரிழந்த அகிலா ஒரே மகள் என்பதால் மிகவும் இடிந்துள்ளனர்" அவரது பெற்றோர்கள். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தான் டி.சி.எஸ்-ல் பணிக்கு சேர்ந்ததும் குறிப்பிடத்தக்கது. இவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி DRDO வில் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.