ADVERTISEMENT

பனை உள்ளிட்ட பாரம்பரிய விதைகளை மீட்டெடுக்கும் கோவில் - கிராம பள்ளி மாணவர்களுக்கு குவியும் பாராட்டுகள்...

10:24 AM Jul 31, 2020 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ADVERTISEMENT

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்தில் எசனை கிராமத்தில் கோவில் ஒன்றில் குழந்தைகளை மரம் நடும் பணியில் ஈடுபடுத்தும் நோக்கில் நம்மாழ்வார் நற்பணி இயக்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி பல ஆண்டுகளாக இயற்கை சார்ந்து மரபு சார்ந்த மரங்களை நடுவதில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஊரடங்கு நேரத்திலும் மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்ட பள்ளி மாணவர்களிடம் கேட்டபோது இயற்கையைப் போற்ற எங்களால் ஆன பணிகளை செய்து வருகிறோம் என்றனர்.

மேலும், 'ஊரடங்கு நேரத்திலும் இயற்கை சார்ந்த பணிகளை செய்து பாரம்பரிய விதைகளை மீட்டெடுப்பது ஆல மர, பூவரசு மர போத்துக்கள் போன்றவற்றை ஆடி மாதத்தில் நடுவது மரபு. எனவே நாங்கள் எங்க ஊர் ஏரிக்கரைகளில் மரப்போத்துக்களை நட்டோம்' என்றனர்.

குழந்தைகளின் மரம் நடுவதும் இயற்கையைப் பேணுவதுமான பணிகளுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிகின்றது. இந்த கிராமத்தில் பள்ளி மாணவர்கள் பல ஆயிரக்கணக்கான பனை விதைகள் ஏரிக்கரைகளில் நட்டு அவற்றை வளர்த்து வருவதாக கூறுகின்றனர் மக்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT