Published on 07/07/2020 | Edited on 07/07/2020

அரியலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரிக்கு காணொளியில் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், துறைசார்ந்த உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அரியலூர் நகர்ப் பகுதியில் 10.83 ஹெக்டேரில் ரூபாய் 347 கோடியில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டப்படுகிறது. மத்திய அரசு புதிதாக அனுமதி அளித்த 11 கல்லூரிகளில் இதுவரை 10 கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
அரியலூர் மருத்துவக் கல்லூரி செயல்பாட்டுக்கு வந்தால் கூடுதலாக 150 மருத்துவ இடம் தமிழகத்துக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.