ADVERTISEMENT

இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு; சரக ஐ.ஜி. நேரில் ஆய்வு...! 

10:06 AM Dec 14, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக அரசானது சீருடை பணியாளர் தேர்வு குழுமம் மூலம் இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பாளர், ஜெயில் வார்டன் என மொத்தம் 10,906 காலி பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிட்டிருந்தது.

அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத்தேர்வு நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக திருச்சியில் மொத்தம் 37 மையங்களில் 20,880 பேர் தேர்வு எழுத அழைக்கப்பட்டிருந்த நிலையில், 2,714 பேர் தேர்வு எழுதவில்லை.

அதேபோல் கரூர் மாவட்டத்தில் 3 மையங்களில் நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத்தேர்வில் மொத்தம் 5,607 பேர் அழைக்கப்பட்டிருந்த நிலையில், 520 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு எழுத வந்த அனைத்து விண்ணப்பதாரர்களையும் முழுமையாகப் பரிசோதனை செய்து முகக்கவசம், ஹால் டிக்கெட் இவற்றைத் தவிர வேறு எந்த மின்சாதன பொருட்களும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

20 பேருக்கு ஒரு கண்காணிப்பாளர் என இரண்டாயிரத்திற்கும் அதிகமான காவல்துறையினர் இந்த எழுத்துத்தேர்வில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், கரூர் பகுதியில் நடைபெற்ற எழுத்துத் தேர்வை திருச்சி சரக ஐ.ஜி ஆனிவிஜயா நேரில் சென்று ஆய்வு செய்தார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT